Sep 24, 2012

கடவுள் துகள்

கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?

இன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.

"அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்-

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
-ஆசான் திருமூலர்-

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-ஆசான் திருமூலர்-

இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா ... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

நன்றி : Gokul Krishnan





நன்றி : 
தமிழ் -கருத்துக்களம்

To Like : தமிழ் -கருத்துக்களம்

காதல்


     காதல் மிகவும் புனிதமானது என்று அனைவரும் சொல்வார்கள். அத்தகைய காதல் எந்த நேரத்திலும் வரலாம். ஆனால் அவ்வாறு காதல் செய்யும் போது, காதலர்கள் தனிமையாக இருப்பதற்காக எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள். அவ்வாறு தனிமையில் இருக்கும் போது, வாழ்க்கையைப் பற்றி தான் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் அந்த தனிமை நீளும் போது, தவறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
காதல் செய்பவர்கள் தவறு செய்வது என்பது புதுமையானது அல்ல. ஆனால் அத்தகைய அழகான காதலில் இருவருக்குள் தவறுகள் ஏற்படாமல் இருந்தால், மிகவும் நல்லது. மேலும் அந்த வாழ்க்கையும் நன்றாக இருக்கும். தவறு செய்யக்கூடாது என்பதற்காக காதல் செய்பவர்கள் முத்தம் கூட கொடுத்துக் கொள்ளக்கூடாதா என்று கேட்கலாம். அது தவறல்ல தான். இருப்பினும், அதற்கும் ஒரு படி மேலே சென்று விட வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
இன்றைய காதலில் ஆண்களும் பெண்களும் விரைவில் அவசரப் படுகிறார்கள். இவ்வாறு அவசரப் பட்டால், அந்த காதலில் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். ஏனெனில் தவறு செய்வதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆர்வம் சற்று வித்தியாசமாக இருக்கும்.
அதிலும் காதல் செய்யும் போது கட்டுப்பாட்டுடன் எந்த தவறும் செய்யாமல், காத்திருந்து திருமணத்திற்கு பின் எதையும் செய்து பார்த்தால், அப்போது ஏற்படும் இன்பத்திற்கும், ஒரு வித கிக்கிற்கும் அளவே இருக்காது. மேலும் அதனால் அவர்களது காதல் வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடித்து, காதலில் வெற்றியான திருமணமும் செய்து விடலாம்.
ஆனால் அதுவே திருமணத்திற்கு முன்னரே, தவறு செய்து விட்டால், இருவருக்குள்ளும் ஒரு வித மனசஞ்சலம் ஏற்பட்டுவிடும். ஏன் சில சமயங்களில் போர் கூட அடித்துவிடும். அதனால் ஒருவருக்கு ஆசை ஏற்பட்டு மற்றவருக்கு ஆசை ஏற்படாமல் போய், அந்த நேரத்தில் சண்டைகள் எழுந்து, இந்த காரணத்திற்காக தேவையில்லாத சந்தேகம், கோபம் போன்றவை எழுந்து, உண்மையான காதலுக்கான மதிப்பை அது அழித்துவிடும்.
அதிலும் பெரும்பாலும் விரைவில் கிடைக்காத பொருளின் மீது அதிக ஆசை, ஆர்வம் போன்றவை இருக்கும். அதேப்போல் தான் காதலில் இருவரும் இணைவது என்பது விரைவில் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டும். அவ்வாறு கிடைத்துவிட்டால், பின்னர் எந்த ஒரு ஆசையும், ஆர்வமும் இல்லாமல் போய்விடும்.

Thanks to : Oneindia

காதல் + காமம்


காதலா? காமமா? அதையும் தாண்டியதா?

                     காதல் என்ற வார்த்தை எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இடம், பொருளைப் பொருத்துதான் அது புனிதத்துவம் பெறுகிறது. பதின் பருவத்தில் வரும் காதல் இனக்கவர்ச்சி என்றும், படித்து முடித்து கைநிறைய சம்பாதிக்கும் போது வருவதுதான் உண்மைக் காதல் என்றும் திருமணத்திற்குப் பின்னர் வேறொருவடன் ஏற்படுவதை கள்ளக்காதல் என்றும் சொல்கின்றனர். ஆனால் காதல் என்பது அன்புரீதியானதா? உணர்வுகளை மட்டுமே அதை புரியவைக்க முடியுமா? எதுவும் எதிர்ப்பார்த்து வருகிறதா? என்றால் எவராலும் புரியவைக்க முடியவில்லை. காதலோ, காமமோ எதுவென்றாலும் ஹார்மோன்கள் செய்யும் மாயம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
பட்டாம்பூச்சி பறக்கும்
காதல் என்பதை மனதில் தோன்றுகின்ற உணர்வுகளில் மிகத் தூய்மையானது என்கிறார் ஜான் ட்ரைடன். அந்த பெண்ணை நினைச்சாலே பறக்கிற மாதிரி இருக்கு. வயிற்றில பட்டாம்பூச்சி பறக்குது என்கின்றனர் சிலர். அதேபோலதான் பெண்களுக்கும், காதல் வந்தலே தூக்கம் தவறிப்போகும். உணவு ருசிக்காது. ஆனால் காதலுக்கும், காமத்திற்கும் நூழிலைதான் வித்தியாசம் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள் சற்று பிசகினாலும் காதல், காமத்திற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.
என்ன வித்தியாசம் ?
வாழ்வு, காதலால் நிரம்பியிருக்கிறது. அதன் முடிவடையாத தொடர்ச்சிக்கு காமம் தேவைப்படுகிறது. ஆனால், காதலுக்கும் , காமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள். காதல் என்கிற உணர்வு மனதிலும், உடலிலும் உருவாக்குகிற தொடர்பு நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் வெளிவந்து விட்டன. காதலின் முதல் ஆரம்ப்புள்ளி 'லஸ்ட்'[சிற்றின்ப இச்சை], அடுத்த பால் மேடு மேற்படுத்துகிற காமத்துப்பால், கவர்ச்சி.
ஹார்மோன்களின் வேலை
ஆளு அழகா சூப்பரா இருக்காளே என்ற ரீதியில் பார்க்கத் தொடங்கி பிறை மாதிரி நெற்றி, குவளைக் கண், கூர்மையான மூக்கு என்று வர்ணிப்பதில் நிற்கும். இதற்குக் காரணம் உடலில் சுரக்கும் டெஸ்டரோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள்.
மனிதர்கள் பிறந்ததிலிருந்தே உடலில் இருந்தாலும் பருவத்தில், நமக்குரிய பெண் / ஆணை பக்கத்தில் சந்திக்கும் போது தான் விழித்துக் கொள்கின்றன. அப்போது இதயத்தில் ஒரு மின்னல் வெட்டும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சியும் பறக்கின்றனர். காதுக்குள் இளையராஜாவின் வயலின் இசை ரீங்காரமிடும்.
நீங்கள் சந்தித்த நபர் உங்களை விட்டு கடந்து போன பின்னும் உங்கள் மனம் அவரைச் சுற்றியே வரும். விஞ்ஞானிகள் இந்த நிலையை 'அட்ராக்ஷ்ன்' என்று வர்ணிக்கிறார்கள். காதல் அந்த இடத்தில் தடுக்கி நிற்கிறது. சிலருக்கு நொண்டி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ஏன் ஸ்ட்ரக்? தடை என்று சொல்கிறீர்கள்?
அந்தப் பெண்ணை பார்த்த்திலிருந்து சரியாகச் சாப்பிட முடியவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பசி போச்சு, தூக்கம் போச்சு, படிப்பில் கவனம் போச்சு, எங்கேயோ பேய் அடித்த மாதிரி பார்க்க வேண்டியிருக்கிறது. உள்ளங்கை வேர்த்துப் போகிறது. ஒழுங்காக யோசிக்க கூட முடியவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று இதற்கும் பதில் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
காதல் ரசாயனங்கள்
நம் மூளையில் சுரக்கும் டோபமைன் என்ற ஹார்மோன்தான் இத்தகைய கிறுக்குத்தனங்களை செய்கிறது என்கின்றனர். இந்த காதல் ரசாயனம்தான் மனதிற்குள் மின்னலை வெட்டிக்கொண்டே இருக்கிறது. காதலிக்கும் நபரைப் பற்றிய சிந்தனைகளை தூண்டிவிடுகின்றனவாம். இந்த ரசாயனம் சாக்லெட்டிலும், ஸ்ட்ராபெரியிலும் இருக்கின்றன. சாக்லெட்டை காதலர்கள் உதட்டுக்கு உதடு மாற்றுவதற்குப் பின்னணியில் இந்தக் காரணம் தான் இருக்கிறது என்கிறார்கள். இந்த காதல் ரசாயனத்தை PEA என்கிற விஷயம்தான் கட்டுப்படுத்துகிறது. இதுதான் காமநிலையில் இருந்து காதல் நிலைக்கு மாற்றுகிறது. காதலிக்கும் பெண்ணின் முகம் திரும்ப திரும்ப வருகிறதா? அவளின் நினைவில் பைத்தியம் பிடித்துப் போகிறதா? மூளையில். PEA பிடித்து ஆட்டுகிறது.
பிரிக்க முடியாத நிலை
இந்த இரண்டு நிலைகளையும் தாண்டிய பிறகு வருவதுதான் 'அட்டாச்மெண்ட்' என்கிற மூன்றாவது நிலை. அதாவது நீ இல்லை என்றால் நான் இல்லை என்ற உயிரில் கலந்த உணர்வு நிலை. இந்த அட்டாச்மெண்ட் நிலைக்கு தள்ளுவது இரண்டு ஹார்மோன்கள் ஒன்று ஆக்ஸிடோஸின் என்பது மற்றொன்று வாஸோப்ரஸின். ஆக்ஸிடோஸின் காதலர்களுக்கு இடையிலான இணைப்பை உறுதி செய்கிறது. பலப்படுத்துகிறது. வாழ்நாள் முழுக்க ஒரு பந்தம் தொடர வைக்கிறது இல்லையா? அதை வாஸோப்ரஸின் செய்கிறது.
உண்மைக்காதல் உடல்ரீதியாக பார்க்காது உணர்வுரீதியாகத்தான் பார்க்கும். உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும். எதையும் எதிர்பார்க்காது. ஆனால் உடலை மட்டுமே பார்க்கும் காமநிலைக்குதான் அதிகம் எதிர்பார்ப்பு இருக்கும் ஒரு பொஸசிவ்னெஸ் இருக்கும். உங்களுடையது காதலா, காமமா? அதையும் தாண்டியதா?

நன்றிகள் : Oneindia