Aug 6, 2019

கோபம்

 என் காதலே ,

உன் அழகான கைகளில்
என் ஆழமான கோபம்

உன் மென்மையான தேகம்
அதில்
என் வன்மையான கோபம்

காதல் கொண்ட அன்பே
மன்னித்துவிடு
கோபம் கொண்ட என்னை

வலிகள் தந்த நான்
இருந்தும் காதல் தந்த நீ

நான் தந்த வலிகள் உன் உடலில்
நீ தந்த காதல் என் மனதில்
மறக்க நினைக்கிறேன் உன் வலிகளை
ஆனால் உன் காதலால்
மறக்க முடியவில்லை நான் கொடுத்த வலியை

உன் வலி மறைந்தாலும்
என் உள்ளம் மறக்காது

உள்ளம் பரிதவிக்க
உணர்வுகள் உயிர்துடிக்க
நினைவுகள் துடிதுடிக்க
உன் இதயத்திடம்
கோருகிறேன் என் மன்னிப்பை
அன்பே மன்னித்துவிடு :(