காதல் ஒரு பள்ளிக்கூடம்
கண்கள் அதில் பாடமாகும்
கற்றால் அது வேதமாகும்
நீயும் காதல் செய்...
காதல் நம் சொந்த சுவாசம்
காதல் நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்...
உலகத்தின் ஜீவ சக்தி
பசி, காதல் ரெண்டும் தான்
பசி கூட தீர்ந்து போகும்
தீராது காதல் தான்...
நீ காதல் செய்க
உன் ஜென்மம் வெல்க
நீ காதல் செய்க
உன் ஜென்மம் வெல்க...
ஆக
நம் காதல் வாழ்க...
காதல் ஒரு பள்ளிக்கூடம்
கண்கள் அதில் பாடமாகும்
கற்றால் அது வேதமாகும்
நீயும் காதல் செய்...
உயிர் தந்த உடல் தந்த
உன் பெற்றோரை காதல் செய்
மொழி தந்த வழி தந்த
உன் குருவை நீ காதல் செய்
ஒரு நேரம் பசி தீர்த்த
உன் சுற்றம் நீ காதல் செய்
உயிர் தந்து உயிர் காக்கும்
உன் நட்பை நீ காதல் செய்
மேகம் என்னும் தாளில்
கதை கிறுக்கும் சிறு மின்னல்
அதை காதல் செய்
பூமி என்னும் பொன் தட்டில்
வெள்ளி காசாய் விழும் மழையை
நீ காதல் செய்...
உதிர்ந்து உதிர்ந்து பின்னும்
வளர்ந்து வளர்ந்து வந்து
முளைக்கும் கொழுந்தினை காதல் செய்
குறைந்து குறைந்து தினம்
கரைந்து கரைந்து பின்னும்
வளரும் பிறையினை காதல் செய்...
காதல் ஒரு பள்ளிக்கூடம்
கண்கள் அதில் பாடமாகும்
கற்றால் அது வேதமாகும்
நீயும் காதல் செய்...
காதல் நம் சொந்த சுவாசம்
காதல் நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்...
பருந்தோடு சிறு கோழி
பறந்தடிக்குதே அந்த
கோபத்தே காதல் செய்...
நிழல் நீட்ட மரக்கூட்டம்
வெயில் தாங்குதே அந்த
தியாகத்தே காதல் செய்...
அறிவூட்டும் உன் வறுமையை
நீ காதல் செய்...
அதை நீக்கிடும் உன் திறமையை
நீ காதல் செய்...
நாடு காடு எங்கும் நரம்பு போல வரும்
நதிகளை காதல் செய்க
அன்னை ஈன்றவுடன் நம்மை ஏந்திக்கொண்ட
மண்ணை காதல் செய்க
நாடு காடு எங்கும் நரம்பு போல வரும்
நதிகளை காதல் செய்க
அன்னை ஈன்றவுடன் நம்மை ஏந்திக்கொண்ட
மண்ணை காதல் செய்க
தேசத்துக்கு பூ சிந்தும்
தேசிய கொடியை காதல் செய்...
தேசிய கொடிக்கு உயிர் சிந்தும்
சிப்பாய் படையை காதல் செய்...
காதல் ஒரு பள்ளிக்கூடம்
கண்கள் அதில் பாடமாகும்
கற்றால் அது வேதமாகும்
நீயும் காதல் செய்...
காதல் நம் சொந்த சுவாசம்
காதல் நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்...