காதல் “காதல், காதல், காதல்
காதல் போயின் சாதல் சாதல் சாதல்"பாரதியையே பாடாய் படுத்தியுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை.கவிஞர்கள் எல்லோருக்கும் பாடுபொருளாய் உள்ள இந்த காதல் அப்படி என்ன மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது?`காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர்கள்.அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும்..காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.மனவிரக்தி:காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மனவிரக்தி மற்றும் உளரீதியான துன்பங்கள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.மனப்பதற்றம்:புதிதாக காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது.வலிகளைத் தாங்கும் தன்மை:மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.ரத்த அழுத்தம்:மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.காய்ச்சல் அதிகம் வராது:காதல் வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.நீண்ட ஆயுள்:தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால் , பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.காதலின் மிகப் பெரிய கொடை:குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஆதலினால் காதல் செய்வீர் - இதுவும் பாரதி சொன்னதுதான்.பூக்களும் காதலைச் சொல்லும்!
காதல் என்பது இளமையின் வசந்தகாலம். எல்லோருமே ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதலை கடந்து வந்திருப்பார்கள். எல்லா காதலுமே வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்திருக்க வாய்ப்பில்லை. சின்ன சின்ன விசயங்கள்தான் பூதாகரமாக மாறி தோல்விக்கு அடிகோலியிருக்கும்.
காதலில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஜெயித்த காதலர்கள் சிலர் கூறிய விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இப்போது காதலிப்பவர்கள் இவற்றை பின்பற்றலாம்.
- காதலர்களில் இரு வகை உண்டு, பெரும்பாலும் பேசிப் பழகியப் பின்னரே காதலர்களாக ஆவதும், பார்த்த மாத்திரத்திலேயே காதல் உண்டாகி காதலைத் தெரிவித்த பின் காதலர்களானவர்களும் உண்டு.இதில் எந்த வகையாக இருந்தாலும், காதலர்கள் சில அடிப்படையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- காதல் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதலிப்பவருக்கு தெரியாமல் இருக்கக் கூடாது. காதலை மறைப்பதில் எந்த பயனும் இல்லை. தைரியமாக வெளிப்படுத்தினால் மட்டும் நீங்கள் காதலராக முடியும்.
- உங்கள் நண்பர்களிடம் எல்லாம் மாய்ந்து மாய்ந்து நீங்கள் காதலிப்பதை தெரிவிப்பதை விட ஒரு நிமிடம் தைரியமாகச் சென்று நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.
- காதலிப்பவரிடம் அடிக்கடி உங்களது காதலை தெரிவியுங்கள். அது வார்த்தையாகவும் இருக்கலாம். வாழ்த்து அட்டையாகவும் இருக்கலாம். பூக்களும் உங்கள் காதலைச் சொல்லும்.
- எதை வேண்டுமென்றாலும் மறக்காலம் காதலிப்பவரின் பிறந்தநாளை மட்டும் மறக்கக்கூடாது. துணையுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பிறந்தநாள் நினைவில் இல்லாதது போல இருந்துவிட்டு பின்னர் பரிசு கொடுத்து அசத்தலாம்.
- ஈகோ மனப்பான்மை இருக்கக்கூடாது. இதுதான் காதலர்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.
- காதலர்கள் எங்கு சென்றாலும் இருவரது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுங்கள். செல்லும் இடமும், போய் வரும் நேரமும் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் அமையும் படி திட்டமிடுங்கள்.
குறைகளை பட்டியல் இடாதீர்கள்- உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் காதலரின் குறைகளைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
- காதலிப்பவரின் குணாதிசயங்களை மாற்ற வேண்டும் என்று நிினைக்காதீர்கள். அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். மிகவும் தவறான செயலாக இருந்தால் மட்டும் அதனை எடுத்துக் கூறி அவருக்கு உணர்த்துங்கள்.
- கருத்து வேறுபாடு ஏற்படும்போதெல்லாம் காதலரிடம் இருக்கும் குறைகளைப் பட்டியலிடாதீர்கள். அதற்கு பதிலாக அவரிடம் இருக்கும் நற் குணங்களை எடுத்துக் கூறி இப்படிப்பட்ட நீங்களா இதைச் சொன்னீர்கள் அல்லது செய்தீர்கள் என்று கூறினால் சற்று மேலாக இருக்கும்.
- காதலரை விட நீங்கள் உயர்ந்தவர் என்ற அடிப்படையில் எந்த பேச்சும் இருக்கக் கூடாது. இருவரும் ஒரே உயிர் என்பது போன்றும், ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வது போன்றும் உங்கள் பேச்சு இருக்கட்டும். மற்றவர்களைப் பற்றிய அடிக்கடி காதலிப்பவரிடம் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும்.
- ரகசியம் காப்பது காதலில் மிகவும் முக்கியம். காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவையாக இருக்கவேண்டும்.
இப்படி இன்னும் இன்னும் நிறைய. அத்தனையையும் பின்பற்ற முடியாவிட்டாலும் கூட நச்சென்று நாலை கையில் எடுத்தால் இனிமையான காதல் உங்கள் வசமாகும்.
காதலில் வெற்றி பெற வழிமுறைகள் காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் :
- நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும்.
- நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோமா ? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான்.
- நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.
- நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னிப்பாக கவனித்து பதில் கொடுத்தால் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான்.
- சாதாரணமாக பேசும் பொழுது நீங்கள் அணிய உள்ள உடையின் நிறம் பற்றி நண்பர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த கலரை நீங்கள் அணிய உள்ளதாக கூறினால் நீங்கள் விரும்பும் நபரும் அதே கலர் உடையில்தான் வருவார் என்பது நிச்சசயம்.
- உங்களுக்குப் பிடித்த பாடலை முணுமுணுங்கள். உடனே அது உங்களவரின் ரிங்டோனாகவோ, காலர் டியூனாகவோ மாறிவிடும்.
- பிடித்த பொருட்களை கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகிவிடும்.
- எந்த ஒரு விஷேச தினமென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை அதிகமாக்கும்.
- எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். காதல் தருணங்களில் உண்மைதான் அன்பின் ஆழத்தை அதிகப்படுத்தும்.
- நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. நம் காதலிக்கும் நபரிடம் இருந்து முத்தமோ, அடியோ எதுவென்றாலும் வாங்குவது நாமாகத்தான் இருக்க வேண்டும்.
- ஆல் தி பெஸ்ட். தைரியமாக காதலை வெளிப்படுத்துங்கள் வெற்றி பெறுங்கள். இது போல் மேலும் அறிந்து கொள்ள
இங்கே கிளிக் செய்யவும்.
காதலில் முத்தம், என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதை பற்றிய சில கருத்துக்கள்:காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம். அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆர்வம் அதிகரிக்கும்இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திஇதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.
தொப்பை குறையும்ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் குறைகிறது66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.
இக்கருத்துகள் கிழ்க்கண்ட இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த இணையத்தை
பர்ர்க்கவும். மேலும் இந்த இணையத்தில்
தாம்பத்தியம் மற்றும்
திருமணம் போன்றவற்றே பற்றிய அறிய பல கருத்துகள் உள்ளன.
நன்றி:
http://tamil.indians.com/