Mar 8, 2012

அம்மா

ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா
ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும் லாலாலா.....லாலாலா.....லாலாலா.....லாலாலா.....
பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்தே பசி மறப்பா
இளவட்டம் ஆன பின்பும்
எண்ணை தேய்ச்சு குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை
உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நெல்லுமுனைய
மெல்ல மெல்ல தான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா
ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
மண்ணில் ஒரு செடி முளைச்சால்
மண்ணுக்கு அது பிரவசம் தான்
உன்னைப் பெற துடி துடிச்சால்
அன்னைக்கு அது பூகம்பம் தான்
சூரியனைச் சுற்றிக் கொண்டே
தன்னை சுற்றும் பூமியம்மா
பெற்றெடுத்த பிள்ளையச் சுத்தி
பித்துக் கொள்ளும் தாய்மையம்மா
கர்ப்பத்தில் நெழிந்த உன்னை
நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பா
மேதையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு 
இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா
ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்னை
தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா



*********************************************************
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கு சொன்னது...
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே ..
அகிலம் யாவும் ஆள்கிறதே
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாய்..
ஊரு கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
.. நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி ..
நானே.... தாயாய் மாறிட வேண்டும்
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
.. நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேல் ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ......
சுழலுகின்ற பூமியில் மேலே சுழறாத
பூமி நீ.........
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற........
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து.....!!!!!!!!!!!!!!!