Apr 5, 2012

மணியே மணிக்குயிலே

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ…ஓ !

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே

பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே..
என்ன இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
கன்னிமயில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழயே
பெண்ணிவளை ஆதரித்து பேசி தொட்டு காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலயே
சொல்லி சொல்லி ஆசை வைத்தேன் கொடி இடையில் பாசம் வைத்தேன்

பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ ஓ !

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே

நீ வருவாய் என

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்

நீ வருவாய் என
நீ வருவாய் என
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென
தினம் தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகன் ஆகி விட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் கா-என கரைந்தாலும்
உன் பாசம் பார்க்கிறேன்

நீ வருவாய் என
நீ வருவாய் என
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை

உலகில் பெண் மக்கள் நூரு கோடியாம்
அதிலே நீ யாரடி?
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி?
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாய் என
நீ வருவாய் என

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
நீ வருவாய் என

அம்மா

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?
காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?
இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது
காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?
காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?
இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேன் அம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?
இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா
தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மனி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச என்னுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா
நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ?

பூவே பூவே பெண் பூவே

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே
உன் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே

காதலின் வயது
அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம்
நாம் வாழனும் வாடி
ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால்
உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட
கோடி வருஷமாகும்

காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே

பூமியை தழுவும்
வேர்களை போலே
உன் உடல் தழுவி
நான் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டு நூறு நீயும் நானும்
சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள் நம்மை
மீண்டும் பாட வேண்டும்

காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே

உன் உதட்டோர சிவப்பே

உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
நீ சிரிச்சலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்
என் செவ்வாழை தண்டே….. ஏ….
என் செவ்வாழை தண்டே சிறுகாட்டு வண்டே
உன்ன நெனச்சு தான் இசை பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு…

ஏன் மம்முத அம்புக்கு ஏன் இன்னும் தாமசம்…
அடி ஏ அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம்…
ஹே மல்லுவேட்டி மாமா மனசிருந்த மார்க்கம் இருக்குது
என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது
ஏன் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி…
அட ஏன் வேட்டிக்கி அவுந்து விடும் யோகம் இன்னிக்கி….

முருகமலை காடுகுள்ள விறகெடுக்கும் வேளையிலே
தூரத்துல நின்னவளே தூக்கி விட்டாலாகாதா
பட்ட விறகு தூக்கிவிட்டா கட்டை விரலு பட்டுபுட்ட
விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா
நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா
நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம் இருக்கா
உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துது
உன் கிறுகுல எனக்கு இந்த பூமி சுத்துது

சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும்
பொட்டுகன்னி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும்
உம்ம நெனச்சு பூசையிலே வேப்பெண்ணையும் நெய் மனகும்
நீ குளிச்ச ஓடையிலே நான் குளிச்ச பூ மனகும்
ஹே வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குறே
என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குறே
அடி என் நெஞ்சிலே ஏண்டியம்மா வட்டி வைக்கிற
உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிற

அரியாத வயசு

அரியாத வயசு
புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல்
செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆச மொளைக்குதே
ரெண்டும் இங்கே காதல்
செய்யும் நேரம்
வெட்ட வெளி பொட்டளிலே மழ வந்த
இனி கொட்டங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர் வந்த
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர் வரும்
ஓ ஹோ அரியாத வயசு
புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல்
செய்யும் நேரம்

பள்ளி கூடத்துல
பாடம் நடத்துல
யாரும் மெனகட்டு படிக்கல
எந்த கெழவியும்
சொன்ன கதை இல்ல
காட்டுல மேட்டுல
காத்துல கலந்ததும்
ஒரவுக்கு இதுதான் தலமெ
இத உசுர நெனக்கும் இளமெ
காதலே கடவுளின் ஆணை
அவன் பூமிக்கு
தொட்டு வெச்ச சேனை
உட மாத்தி
நட மாத்தி
அடி ஆத்தி
இந்த வயசுல

அரியாத வயசு
புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல்
செய்யும் நேரம்

கரந்த பாலையே
காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும்தான்
கோர புல்லுலே
மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது
தோளுல சாயுது
ஊரையும் உறவையும்
மறந்து
நடு காட்டுலே நடக்குதே
விருந்து
நத்த கூட்டுல
புகுந்து
இனி குடுத்தனம் நடத்துமா
சேர்ந்து
அடி ஆத்தி
அடி ஆத்தி
அடி ஆத்தி
இந்த வயசுல

அரியாத வயசு
புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல்
செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆச மொளைக்குதே
ரெண்டும் இங்கே காதல்
செய்யும் நேரம்

பையா

துளி துளி துளி

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோல்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

********************************************

 சுத்துதே சுத்துதே பூமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா
ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்

*****************************************

 பூங்காற்றே பூங்காற்றே

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் தேசம்
என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்
மஞ்சள் வானம்
கொஞ்சம் மேகம்
கொஞ்சி பேசும் காற்று
தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல்
சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள்
புன்னகையை கூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து
பின்னாடி உன் கண்ணை
பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னில்
ஒரு வார்த்தை பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிபோக்கன் போனாலும்
வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி
வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்
அழகான
நதி பார்த்தால்
அதன் பெயரினை கேட்க
மனம் துடிக்கும்
இவள் யாரோ
என்ன பேரோ
நானே அறிந்திடும் வரையில்
ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர் தாண்டி
ஏராளம் பேர் தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற
நெடுங்சாலை விளக்காக
அலைகின்றேன் எரிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும்
அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே
என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் தேசம்
என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

*******************************************

 என் காதல் சொல்ல

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே உன் அழகாலே
என் வெய்யில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
ஹேய்..
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் அங்கு குடி யேருமோ
கொஞ்சம் நடித்தேனடி
கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி
உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்..ஹேய்..
ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
அந்த நிமிடங்கள் நில்லட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்
சிறு பிள்ளை என
எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே
என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்..
ஹேய்..
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

**********************************************

 அடடா மழைடா

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு
கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
மயில் தோக போல
இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல
என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
பாட்டு பாட்டு
பாடாத பாட்டு
மழை தான் பாடுது
கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே
என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே
உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே
நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
அனல் மழைடா
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
அனல் மழைடா
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு
பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால
மழ கூட சூடாச்சு
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு
கூத்தாடி கொண்டாடு



சிந்திய வெண்மணி

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா

சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பதை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் முடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பிரிவொன்றை சந்தித்தேன்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

ஒரு வரி நீ .. ஒரு வரி நான்
திருக்குறள் நாம் உன்னை சொன்னேன்
தனி தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என்றும் நான் துடைகின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போனேன்
பிரிவினலே நீயாய் ஆனேன்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே
நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குரல்
நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே

கதிரவனை பார்த்து

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

இறைவனின் கலைநயம்
இயற்கையின் அதிசயம்
உலகோரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம் கண்டேன்
ஆ அஹ்ஹா

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

பூபாள ராகம் ஆ.ஆ.ஆ
பூ பாடும் நேரம் ஆ.ஆ.ஆ
தாகம் கொண்ட ஓடை
தாளம் போடும் வேளை
தாகம் கொண்ட ஓடை
தாளம் போடும் வேளை
தடாகம் குதித்திட
தாமரை குளித்ததமா
வெள்ளி நிற மீன்களும்
வெளி வந்து ரசித்ததமா

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

பச்சி வண்ண சேலை ஆ.ஆ.ஆ
கட்டிகொண்ட பூமி ஆ.ஆ.ஆ
வானமெங்கும் கவிதை
எழுதி பார்க்கும் பறவை
வானமெங்கும் கவிதை
எழுதி பார்க்கும் பறவை
வண்ண வண்ண கோலங்கள்
போட்டிடும் மேகங்களே
சின்ன குயில் ராகங்கள்
கேட்டிடும் காடுகளே

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

காதல் வந்ததும்

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,

புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,
தன்னனானன, தன்னனானன,
தன்னனானன, தன்னனானன,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

தூங்காத காற்றே,
துணை தேடி ஓடி,
என் சார்பில் எந்தன்,
காதல் சொல்வாயா?
நில்லாத காற்று,
சொல்லாது தோழி,
நீயாக உந்தன்,
காதல் சொல்வாயா?
உள்ளே எண்ணம்,
அறும்பானது,
உன்னால் இன்று,
ருதுவானது,
நான் அதை சோதிக்கும்,
நாள் வந்தது,

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

நீ வந்து போனால்,
என் தோட்டம் எங்கும்,
உன் சுவாச வாசம் வீசும்,
பூவெல்லாம்,
நீ வந்து போனால்,
என் வீடு எங்கும்,
உன் கொலுசின் ஓசை கேட்கும்,
நாள் எல்லாம்,
கனா வந்தால்,
மெய் சொல்கிறாய்,
கண்ணில் வந்தால்,
பொய் சொல்கிறாய்,
"போ," வென்றும் வார்தையால்,
"வா" எங்கிறாய்,

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,

பாரதிக்கு கண்ணம்மா

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனபோது உன் நிழலும் இங்கே பூக்குது

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

ஐய்யயோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கி தந்தாளே
கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் ஒன்று பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நில்லு வெண்ணிலாவின் காதில் போய்ச் சொல்லு

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாரு
பூக்களுக்கு நீயே வாசமடி…
புன்னகைக்கு நீயே தேசமடி

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனபோது உன் நிழலும் இங்கே பூக்குது

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

கண்மூடி திறக்கும்போது.....................

கண்மூடி திறக்கும்போது..
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி,
அவளே வந்து நின்றாளே
குடை இல்ல நேரம் பார்த்து,
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து,
இதுதான் காதல் என்றாளே
தெரு முனையை தாண்டும் வரையில்,
வெறும் நாள்தான் என்று இருந்தேன்,
தேவதையை பார்த்ததும் இன்று,
திரு நாள் எங்கின்றேன்
அழகான விபத்தில் இன்று,
ஹையோ நான் மாட்டிகொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்,
வேண்டாம் என்றேன் ….

உன் பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அரியுமா ..
உயிருக்குள் இன்னோர் உயிரை,
சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மழையின் கடையை…,
உணர்கின்றேன் காதல் இதுவா

கண்மூடி திறக்கும்போது..
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே

வீதி உலா நீ வந்தால்
தெரு விளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சுரியனும்……
அடம் புடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கதான்
மழை குதிக்குமே…
பூகம்பம் வந்தால் கூட…..
ஓ ஹோ,………
பதறத நெஞ்சம் எனது
ஓ ஹோ,………
பூ ஒன்று மோதியதாலே
ஓ ஹோ,………
பட்டென்று சரிந்தது இன்று
ஓ ஹோ,………

கண்மூடி திறக்கும்போது..
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி,
அவளே வந்து நின்றாளே
குடை இல்ல நேரம் பார்த்து,
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து,
இதுதான் காதல் என்றாளே

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சன்னிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சன்னிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

கார்காலம் வந்தாலென்ன
கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய்யன்பு போகும்
மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல் ஆச்சு

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு தரவா இல்லை
நம்பிக்கையே நல்லது..
எரும்புக்கும் வாழ்கை உள்ளது..

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சன்னிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சன்னிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல் ஆச்சு

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக ஒம் பாட்டு மட்டும் துணையாக
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டானினேன்
மழ பேஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ

கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி ஒம் முகந்தான்
கண்மூடித் தூங்கயில காணும் கனவெல்லாம் ஒன்னோடதான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலைமேல் விளக்கா ஏத்திவைப்பேன் உன்னப் படம்போல் மனசில்
மாட்டிவைப்பேன்

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக ஒம் பாட்டு மட்டும் துணையாக
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக ஒம் பாட்டு மட்டும் துணையாக

பாத கொலுசு

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்

சித்தாட போட்ட சின்ன மணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளி பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செல தான்
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்

குத்தால மேகம் எல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியை கொடி இடை தான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானம் எல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒன்னாக கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்


செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென் பழனி சந்தனமே
தென்காசி தூறலிலே கண் விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்

பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலம் நேரம் மாலையிடத்தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
சித்தாட போட்ட சின்ன மணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளி பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செல தான்
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்

யார் வந்தது யார் வந்தது

யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

நீ மட்டும் ம்ம் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தான்

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை

தீண்டாமல் சருகாகவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாகவேன்
ஐயோடி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலங்களில் ஏன்?

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

என்னைத் தொட்டு

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னனின் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணனின் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா…அன்பால் கூட வா…
ஓ…பைங்கிளி…நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னனின் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு…
என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு…
அன்பே ஓடி வா…
அன்பால் கூட வா…
அன்பே ஓடி வா…அன்பால் கூட வா…
ஓ…பைங்கிளி…நிதமும்

என்னைத் தொட்டு…
நெஞ்சைத் தொட்டு…
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கையின் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கையின் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே…
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே…
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே…
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே…
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே…
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே…
என்னில் நீயடி…
உன்னில் நானடி…
என்னில் நீயடி…உன்னில் நானடி…
ஓ பைங்கிளி… நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கையின் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கையின் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..
அன்பே ஓடி வா…அன்பால் கூட வா…
ஓ…பைங்கிளி…நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கையின் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

பூவுக்கெல்லாம் சிறகு

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில்கூட தேன்துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காலம் செய்த மாயம்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

நிலவை பிடித்து எரியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

ஐ லவ் யூ, லவ் யூ சொல்லதானே
ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சுரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழம் தெரியும்
காதல் என்பது சரியா தவரா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கைது செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டுவிட்டது

ஐ லவ் யூ, லவ் யூ சொல்லதானே
ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை குளிர்ந்துவிட்டது
இதயம் இதயம் மலர்ந்துவிட்டது
இசையின் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவரா
இதுதான் எனக்கு தெரியவில்லை


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில்கூட தேன்துளி கசிந்தது எந்தன் ராகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காலம் செய்த மாயம்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்

பெண்ணல்ல பெண்ணல்ல

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுது
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சித்திரை மாத நிலவு ஒளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ

வாழ்வே மாயம்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா…
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

இங்கே யாரார்க்கு என்ன
வேஷமோ
யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை
ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாளாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி
நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேலை
நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா

உன்னக்கென உன்னக்கென

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே
உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ச்ரிராம ஜெயத்தை போல் உனது பேரை
தினம் எழுதி பார்க்கிறேன்,
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிரேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஒசை
உயிர் வரை கேட்கிறதே

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே

கடலாக நீயும் மாறினால்
அதில் முழ்கி முழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பாலாகும் வரம் கேட்பேன்
அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
அகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோது உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே

முத்து மணி மாலை

முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசபட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு தந்த ராசவே
வாக்கபட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசவே
தாழம் பூவில வீசும் காத்தில
பாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை
என்னை தொட்டு தாலட்ட
வெக்கத்தில சேலை
கொஞ்சம் விட்டுவிட்டு போராட

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
நெத்தி சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரபூவும் அச்சபடுமா
பக்கதுணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேச தேகம் சூடேர

முத்து மணி மாலை
என்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமரும் நீ தானே
இது நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தாஏ
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

போவோமா ஊர்கோலம்

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

அரமண அன்னக்கிளி தரையில நடப்பது நடுக்குமா அடுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம் அரண்மண கொடுக்குமா
குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்து குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
ரத்தினங்கள் தெரிகுது முத்துமணி ஜொலிக்குது நடந்திடு
நதியிலே
உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்