Apr 5, 2012

மணியே மணிக்குயிலே

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ…ஓ !

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே

பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே..
என்ன இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
கன்னிமயில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழயே
பெண்ணிவளை ஆதரித்து பேசி தொட்டு காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலயே
சொல்லி சொல்லி ஆசை வைத்தேன் கொடி இடையில் பாசம் வைத்தேன்

பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ ஓ !

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே