எங்கேயும் காதல்
திமு திமு தீம் தீம் தினம்
திமு திமு தீம் தீம் தினம்தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மனம்
ஒ அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்
திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்
உள்ளமே உள்ளமே உள்ளே உன்னைக் காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணைத் துண்டாக்கி துள்ளும் (கொஞ்சம்)
சந்தோசமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்கக் கண்டேனே
சந்தேகமாய் என்னையே நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ! அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
***********************************************************************
காதல் ரோஜாவே..
காதல் ரோஜாவே -ரோஜா
காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
தென்றல் என்னைத் தீண்டினால்,
சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில்,
தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால்,
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில்,
மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
வீசுகின்ற தென்றலே!
வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா!
பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே!
கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே!
புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
***********************************************************************
ஆல்பம்
கண்ணே கண்ணில் காதல் வைத்து
Yo In this life Love is abbreviated
The thing is People see what they do not understand
That's why We got to know what we are engaged in
Between yourselves
So Listen
கண்ணே கண்ணில் காதல் வைத்து
என்னை கொள்ளாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய
கற்று தந்தாயே
உண்மை தெரிந்து உன்னை நாடினும்
ம்ம்ம்ம்ம்ம்...
(கண்ணே கண்ணில்...)
கற் கற் கற் கற்
காதல் புனிதமென்று சொல்றாங்க
அது எத்தனை அளவு உண்மைன்னு தெரியலைங்க
பல பேரு சிக்கிதான் தவிக்கிறாங்க
காதலே வேணாமுன்னு நினைக்கிறாங்க
இது யார் செய்த தப்பு
யார் மேலே வெறுப்பு
காதலியை நினைக்கும்போது வரும் பாரு கடுப்பு
இந்த காதல் ஒரு வலி
அதுக்கு இல்லை இரு விழி
காதல் வலி போக என்னிடம் மருந்தும் ஒன்னும் இல்ல
காதலை குறை சொல்லி ப்ரோஜனம் இல்ல
சில காதலிக்கிற பொண்ணுங்களுக்கு மனசே இல்ல
மனசாட்சி இல்ல
இன்னும் கொஞ்சம் சொல்ல போனா
அவங்க நம்பள மனசை நாமே புரிஞ்சிக்கல
சில பொண்ணுங்க துரத்தி துரத்தி காதலிப்பாங்க
நீங்க கேட்டது எல்லாமே வாங்கி தருவாங்க
உங்க நணபனை அண்ணன்னு அழைப்பாங்க
நீங்க வெள்யூரு போகும் வரை காத்திருப்பாங்க
அந்த அண்ணன் அண்ணன் இல்லை
Then what?
ஊ.. ஊ..
இந்த உறவுக்கு பேரு என்னாங்க
இதை கேட்க போனா நம்ப கெட்டவங்க
இதை துரோகமுன்னு நான் சொல்லவில்லை
இது தவறை இதுக்கு மேலே வார்த்தையில்லை
ஏன் காதல் என்னவென்று உனக்கு தெரியலை
காதல் ரொம்ப புனிதம்
அதை ஏன் நீ கெடுக்குற?
(கண்ணே கண்ணில்..)
பத்து பத்து பத்து
பசிக்கும் பார்க்கும்போது பத்து மேலே ஆசைப்படும் பொம்பளை
நீ கேட்டதை என்னால வாங்கி தரமுடியல
விட்டுட்டு போனீயே நீ பாதியில
இன்னும் கல்யாணம் கூட ஆக வில்லை
ஆனா ஒரு நாளைக்கு ஒரு வாட்டி
Husband Husban Husband
சொன்ன இந்த பொம்பளை
ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லி
தள்ளி விட்டுட்டு போனியே நடு ரோட்டுல
என் பாட்டு கண்டதில்லே
ஐயோ அம்மா திண்டாட்டத்திலே
உன் அப்பா கொண்டு வந்த
பணக்கார மாப்பிள்ளை நீ
கல்யாணம் பண்ண அந்த அப்பாவியே
இப்போ அவன் கூட சேர்ந்து உன்னால வாழ முடியல
பழைய காதலை நினைத்து நீ வாடி வதங்குற
என்னை சந்திக்க நினைத்த நீ தவியா தவிக்குற
இது யாருக்கு லாபம்ன்னு எனக்கு தெரியலே
இன்னும் யார் யார் என்னாவ போறாங்கன்னு எனக்கு புரியல
இது நினைத்து பார்க்கையில்
உயிர் தீயில் வேகுதடி
அவனை எதிரில் வைத்து
என்னை மடியில் வைத்து கொஞ்சணுமா
என்னம்மா கண்ணம்மா
ஆசை இன்னும் தீரவில்லையா
சொல்லுமா
இனியும் ஏமாறுவேனா நானா?
ஆஹா.. Pergilah..
(கண்ணே கண்ணில்...)
இங்கே யாரையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை
நீதி இது காதலின் நீதி
இங்கு இல்லை நீதிபதி
நீதான் வலி உன்மேல் பழி
அது வேறு ஒன்றும் இல்லை
காதல் செய்த சதி
உன் தலைவிதி
வெல்லும் பார் மதி
ஹா.. ஏன் இங்கு நாந்தான் ஆண்களின் பிரதிநிதி
காதல் தோல்வி வேதனை கொண்ட
ஆண்களின் நிலை
அது ஒரு கோடி சிறைச்சாலையின்
தினம் ஒரு நொடி இந்த நிலை
ஆளான ஆண்களின் எண்ணிக்கை இன்று
கோடி கோடி கோடி
காதல் தோல்வியும் உயிர் போகுதடி
இனி உங்க போலியான காதல் வேணுமாடி
எங்களுக்கும் பல நிச்சயங்கள் உள்ளதடி
நாங்களும் வாழ்க்கையில் சாதிக்கிறோம் பாருங்கடி
சில நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க
அவங்கள பார்த்தாச்சும் pleaselah திருந்த பாருங்க
நம்ம பெற்ற தாயும் கூட ஒரு பொண்ணுதானுங்க
அவங்க அருமை பெருமையை கேட்டாச்சும் தெரிஞ்சுக்கோங்க
(கண்ணே கண்ணில்...)
***********************************************************************
ஜோடி-ஒரு பொய்யாவது.
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
(ஒரு பொய்யாவது..)
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
இரவினைத் திரட்டி.........ஆ.....
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...
விண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் தீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
(ஒரு பொய்யாவது..)
(உண்மையும்..)
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
(ஒரு பொய்யாவது..)
***********************************************************************
அமர்க்களம்.
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்
***********************************************************************
பெண்மை என்பது-SPB
மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு சுவரம்தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏனடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
(மண்ணில்..)
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமின்றி
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடைய்யினில் உடையினில்
அதிசய சுகந்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில்..)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் ழிவியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகந்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
(மண்ணில்..)
***********************************************************************
இது தான் காதலா!?
உன்னை சந்திக்கும்
நாளெல்லாம் நிச்சயமாக
ஒரு கவிதையாவது
எழுதி விடுவேன். . .
ஆனால்------
உன்னை சந்திக்காத
நாளெல்லாம் கண்டிப்பாக
பத்துக் கவிதைகளாவது
எழுதி விடுகிறேன். . .
எப்படி
ஓ. . .
இதுதான் காதலா. . . !