திருநெல்வேலி
திருநெல்வேலி (ஆங்கிலம்:Tirunelveli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகருமாகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 411,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநெல்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது
பெயர்க் காரணம்
இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.
இரட்டை நகரங்கள்
திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.தமிழின் தோற்றம்
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.திருநெல்வேலி ம்ற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் தமிழ் நெல்லை தமிழ் என்று வழங்கப்படுகிறது.ஆறுகள்
தாமிரபரணி ·கொறையாறு ·வேளாறு ·கடநாநதி ·எலுமிச்சையாறு ·
பச்சையாறு ·நம்பியாறு ·வேனாறு ·வெட்டாறு.....
தாமிரபரணி ஆறு
நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.
திருநெல்வேலி தமிழ்.
தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.
தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,

- நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
- அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
- நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
- ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
- முடுக்குது - நெருக்குகிறது
- சொல்லுதான் - சொல்கிறான்.
No comments:
Post a Comment