Jan 23, 2012

மழை


மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில்  இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீரவியக்கி  மேலெழுந்து சென்று மேகங்களை  அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின்  மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியகிவிடுகிறது விடுகிறது. பாலைவனம்  போன்ற பகுதிகளில் மொத்த நீரும்  ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.

மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா
"அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகு கிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்."

மழையின் வகைகள்
  • ஆலி - மழை துளி
  • சோனை - விடா மழை
  • தூறல் - சிறிய மழை,
  • சாரல் - மலையில் பட்டு விழும் மழை.
  • அடைமழை ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும் கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.
  • கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
  • மாரி - மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள். மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது.
  • ஆலங்கட்டி மழை - பனி கட்டி கட்டியாக மழையுடனோ அல்லது தனியாகவோ விழும் மழை.
  • பனிமழை - பனி மழையாக பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.
  • ஆழிமழை - ஆழி என்றல் கடல் இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்.
  • துளி - மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள். இதில் மழையை துளி என்று கூறப்பட்டுள்ளது. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன், அளியின்மை வாழும் உயிர்க்கு (திருக்குறள்).
  • பெய் - நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். இதில் மழையை பெய் என்று கூறப்பட்டுள்ளது. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட, பெயலும் விளையுளும் தொக்கு (குறள்).
  • புயல் - புயல் என்பது காற்றுடன் வரும் மழையை குறிக்கும். இதை குறைவில்லாத மழை என்று வள்ளுவர் தருகின்றார். ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும், வாரி வளங்குன்றிக் கால் (குறள்). மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
  • வருணன் - மழையின் கடவுள் இதுவும் மழையே.

No comments: