இந்த செய்தி 05/02/2012 அன்று தினத்தந்தி நாழிதளில், தினம் ஒரு தகவல்
பகுதியில் வெளியிடப்பட்ட செய்தி.
நன்றி தின தந்தி!
சுவிஸ் வங்கியின் கணக்குகள்.
எப்படியாவது சுவிஸ் வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பித்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் கருப்பு பண முதலலைகள். கணக்கில் வராத கருப்பு பணத்துக்கும் சுவிஸ்
வங்கிக்கும் அப்படி என்ன தொடர்பு? உலகம் முழுவதும் லட்சகணக்கான
வங்கிகள் இருந்தாலும் சுவிஸ் வங்கிக்கு மட்டும் இந்த பெயர் வரக்காரணம், அதன் கணக்கு வழக்கு முறைதான். சுவிஸ் வங்கியில் இரண்டு விதமான கணக்குமுறைகள் பின்பற்றுகிறார்கள். ஒன்று மற்ற எல்லா வங்கிகளிலும் கடைபிடிக்கும் முறை. அதாவது கணக்கு வைத்திருப்பவரின் பெயர் வெளிபடையாக தெரியும். டெபாசிட் வைத்த தொகைக்கு மாதா மாதம் வட்டி பெரும் முறை. மற்றொன்று முதளிட்டாலரின் பெயர் இருக்காது. எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்தாலும் எப்படி வந்தது என்று கேட்க மாட்டார்கள்.
இரண்டாவது முறையில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் சுவிஸ் வங்கியில் வேலை செய்யும் யாருக்குமே தெரியாது. மிக உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே அது தெரியும். அவர்களும் எக்காரணத்தை கொண்டும் கணக்கு வைத்திருப்பவரின் பெயரை வெளியே சொல்ல கூடாது. மீறி சொன்னால் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் 50 ஆயிரம் சுவிஸ் நாணயமான பிராங்கும் அபராதம் செலுத்த
வேண்டும்.
நம்மூரில் வெறும் ஆயிரம் ரூபாயை கொண்டு வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கி விடலாம். சுவிஸ் வங்கியல் ஒரு கோடி ருபாய் இருந்தால்தான் கணக்கே தொடங்க முடியும். இந்த பணத்துக்கு எவ்வளவு
வட்டி தருவார்கள்? என்று கேட்க தோன்றுகிறதா? இதற்கு ஒரு கூட வட்டி
கிடையாது.
மாறாக கணக்கு வைத்திருப்பவர்தான் கணக்கில் இருக்கும் தொகைக்கு மூன்று சதவீதம் சேவை கட்டணமாக வங்கிக்கு கொடுக்க வேண்டும்.
அதை அவர்களை கணக்கில் இருந்து எடுத்துக்கொள்வார்கள். வங்கி
லாக்கரில் நகை பத்திரங்கள் வைத்துகொள்வதற்கு நாம் ஒரு சர்விஸ்
சார்ஜ் வங்கிக்கு கொடுப்பதுபோல், பணம் பாதுகாப்பாக இருக்க சுவிஸ்
வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டும். இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்........ இந்த கட்டணத்தை கட்ட முடியாமல் பலரும் மொத்த
பணத்தை இழந்துள்ளார்கள். வங்கியில் கணக்கு எண்ணை மறந்து தொலைத்தால் முழு தொகையும் வங்கிக்கே சொந்தமாகிவிடும். இது
கணக்கற்ற பணம் என்பதால் மற்ற வங்கிகள் போல் வேறு ஆவணங்களை காட்டி பணத்தை பெற முடியாது. இதனால் சுவிஸ்
நாட்டின் பொருளாதாரமே வங்கியை நம்பி உள்ளது.
கணக்கு வைத்திருப்பவர் குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் அவர்
மீது அந்த நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கையின் பெயரில், தேவைப்பட்டால் சுவிஸ் வங்கி தனது முழு ஒத்துழைப்பையும்
விவரத்தையும் தர மறுப்பதில்லை. நாளுக்கு நாள் கோடிக்கணக்கில் பணம்
சேர்ந்து கொண்டே வரும் சுவிஸ் வங்கியில் நம் இந்தியர்களின் நிலை என்ன
தெரியுமா? சர்விஸ் சார்ஜ் கட்ட முடியாமலும் கணக்கு எண் மறந்து
போனதாலும் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் இழந்த பணம் 180
ஆயிரம் கோடி ரூபாயிக்கு மேல். சுவிஸ் வங்கியில் கணக்கு வைக்க
பணம் மட்டும் போதாது. நல்ல ஞாபக சக்தியும் வேண்டும்.
சிறிது யோசித்து பாருங்கள் இந்த 180 ஆயிரம் கோடி ரூபாயும்
இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவரின் பணம்.
இனிமேலாவது சிந்தித்து செயல்படுங்கள்!
No comments:
Post a Comment