Feb 16, 2012

பூவே உனக்காக.

ஆனந்தம் - ஆண்.

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூதிருபேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்..
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம், ஒன்றாக சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும், சந்தோஷம் தந்திட வேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால், வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால், வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்..
இன்னும் நூறு ஜென்மங்கள், சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்
தென் பொதிகை சந்தன காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே..
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே..
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூதிருபேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்


********************************************

சொல்லாமலே யார்.
                   
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்குள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி
சொல்லாமலே யார் பார்த்தது
மல்லிகைபூ வாசம் என்னை கில்லுகின்றது
அடி பஞ்சு மெத்தை முல்லை போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வழியா
உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா
இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி, உன்னோடுதான்..
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொல்லு கண்மணி
சொல்லாமலே யார் பார்த்தது
கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நாம் காதலா ..
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொல்லு கண்மணி
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
சொல்லாமலே யார் பார்த்தது .........................